விஜய்ன்னா ஓகே! அஜித் பக்கமே செல்லாமல் இருக்கும் முன்னணி தொலைக்காட்சி நிறுவனம்..
தொலைக்காட்சி சேனல்களுக்கிடையில் போட்டிகள் ஆரம்பித்து பல நிகழ்ச்சிகளையும் சீரியல்களையும் ஒளிப்பரப்பு செய்து டிஆர்பியை ஏற்றுவார்கள். அதேசமயம் முன்னணி நடிகர்களின் படங்களை ஒளிப்பரப்பு செய்தும் பணம் சம்பாத்தித்து வருவார்கள். அப்படியாக தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் விஜய் படம் என்றாலே வரிசைகட்டி வாங்க நிற்பார்கள்.
ஏனென்றால் விஜய் என்ற பெயர் தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை ஏற்றுமாம். அப்படி பிரபல தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் மற்றும் சன் நிறுவனம் தளபதி விஜய்யின் பல படங்களை பல கோடிகளுக்கு வாங்கி ஒளிப்பரப்பும் செய்து வருகிறது. அந்தவகையில் சன் நிறுவனம் அஜித் படத்தை வாங்கியும் ஒளிப்பரப்பு செய்து வருகிறார்கள்.
ஆனால் ஸ்டார் விஜய் நிறுவனம் இதுவரையில் அஜித்தின் ஒரு படத்தை கூட வாங்காமல் வருகிறார்களாம். அதிலும் அஜித்தின் ஒரு காட்சிகள் கூட அந்நிறுவன தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யவில்லையாம்.