CSK மேட்ச் பார்க்க வந்த அஜித், அணிந்திருந்த வாட்ச் விலை.. அடேங்கப்பா இவ்வளவா?
அஜித்
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன.
இதில் விடாமுயற்சி படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும், குட் பேட் அக்லி திரைப்படம் மாஸ் வசூல் வேட்டையை நடத்தியுள்ளது.
இது ஒரு புறம் இருக்க, அஜித் குமார் மிக தீவிரமாக கார் ரேஸில் கடந்த பல மாதங்களாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த கிரிக்கெட் விளையாட்டு போட்டியை தனது குடும்பத்தினருடன் வந்து பார்த்து ரசித்திருந்தார் அஜித்.
அது தொடர்பான போட்டோஸ் மற்றும் வீடியோ எல்லாம் சமூக வலைதளங்களில் செம வைரலானது.
இவ்வளவா?
இந்நிலையில், கிரிக்கெட் போட்டியை காண வந்த அஜித் அணிந்திருந்த வாட்சின் விலை குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அஜித் தனது கையில் அணிந்திருந்த வாட்ச் பிரேண்ட் Seiko, இதன் விலை ரூ. 25 லட்சம் என கூறப்படுகிறது.