மனைவி மகனை கண்டுக்கொள்ளாத தளபதி!! விஜய் மகன் சஞ்சய் வாழ்க்கையில் அஜித் செய்த செயல்..

Ajith Kumar Vijay Lyca jason sanjay
By Edward Jan 25, 2024 07:30 AM GMT
Report

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், வேட்டைக்காரன் படத்தின் மூலம் தன் மகன் ஜேசன் சஞ்சய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். கடந்த சில ஆண்டுகளாக லண்டனில் சினிமா சம்மந்தப்பட்ட பட்டப்படிப்பை முடித்து விட்டு குறும்படத்தினை இயக்கி வந்தார் சஞ்சய். தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தினை இயக்கி வருகிறார்.

மனைவி மகனை கண்டுக்கொள்ளாத தளபதி!! விஜய் மகன் சஞ்சய் வாழ்க்கையில் அஜித் செய்த செயல்.. | Ajith Wished Vijay Son Sanjay For Tamil Director

மகன் சஞ்சய் இயக்குனராவது விஜய்க்கு பிடிக்கவில்லை என்றும் அதுகுறித்து விஜய் எந்த கருத்தையும் கூறவில்லை என்றும் செய்திகள் வெளியானது. சஞ்சய் இயக்குனர் ஆவதற்கு அவரது அம்மா சங்கீதா தான் லைக்கா நிறுவனத்திடம் பேசி வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில், சஞ்சய் இயக்கி வரும் அப்படத்தின் PRO-வாக நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தான் பணியாற்றவுள்ளாராம். முதல் தயங்கிய சுரேஷ் சந்திரா, அஜித்திடம் கேட்ட போது தாராளமாக சென்று பண்ணுங்க என்று கூறியிருக்கிறாராம். அதன்பின் தான் அதற்கு சுரேஷ் சந்திரா ஒப்புக்கொண்டிருக்கிறார்.

வரலட்சுமி ராதிகா இடையே பிரச்சனை!! மனைவியை விவாகரத்து செய்த சரத்குமார்

வரலட்சுமி ராதிகா இடையே பிரச்சனை!! மனைவியை விவாகரத்து செய்த சரத்குமார்

மேலும் சுரேஷ் சந்திராவிற்கு கால் செய்து அஜித் போன் நம்பர் வாங்கி பேசியிருக்கிறார் விஜய் மகன் சஞ்சய். அப்போது அறிமுக படத்திற்கான வாழ்த்தையும் அஜித் கூறியிருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகன் இயக்குனர் ஆவதற்கு ஒரு வாழ்த்தோ அல்லது இணையத்தில் ஒரு கருத்துக்களையோ விஜய் செய்யாதது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.