குடைச்சல் கொடுக்கும் அஜித்..அந்த விஷயத்தில் விஜய், ரஜினிதான் பெஸ்ட்!! பிஸ்மி ஓபன்...
ரஜினி, கமல், விஜய், அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் மார்க்கெட்டை வைத்து தான் தற்போது அவர்களின் சம்பளமும் உயர்கிறது. ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றவர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் தான் டாப்பில் இருக்கிறார்.
நடிகர் அஜித் தன்னுடைய 64வது படத்தினை ஆதிக் ரவிச்சந்திரனுடம் மீண்டும் இணைகிறார் என்றும் அக்டோபர் மாதம் கார் ரேஸ் பந்தயம் முடிந்தப்பின் சினிமாவில் நடிப்பார் என்றும் இதற்காக கதை கேட்டு இயக்குநர் தயாரிப்பாளர் வரை எல்லாம் முடிவாகிவிட்டது.
தற்போது தயாரிப்பாளர்களிடம் சம்பளத்தை பெறுவதில் மிகவும் கறார் காட்டுவது, அஜித் தான் என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.
துபாய் வங்கிக் கணக்கு
அதில், நடிகர் அஜித்தை பொறுத்தவரை தன் சம்பள விஷயத்தில் மிகவும் கறாராக இருக்கக்கூடியவர். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பாதியில் நிற்க காரணமே, அஜித்திற்கு உரிய தேதியில் சம்பளத்தை வழங்காதது தான். தயாரிப்பாளர்களிடம் இருந்து சம்பளத்தை வசூலிப்பதில் அஜித்தைவிட விஜய் மற்றும் ரஜினிகாந்த் எவ்வளவோ பரவாயில்லை.
அஜித் தன் சம்பளத்தை வங்கிக்கணக்கில் போடச் சொல்லுகிறார். ஆனால் அது இந்தியாவில் இருக்கும் வங்கிக் கணக்கு இல்லையாம். துபாய் வங்கிக்கணக்கில் போட சொல்கிறார். இது பல தயாரிபபாளர்களுக்கு செளகரியமாக இல்லையாம்.
இந்த விஷயத்தில் அஜித்தைவிட அதிக சம்பளம் வாங்கும் விஜய் எவ்வளவோ பரவாயில்லை. தயாரிப்பாளர் எப்படி, எப்போது கொடுத்தாலும் விஜய் சம்பளத்தை வாங்கிக் கொள்கிறார்.
விஜய், ரஜினி பெஸ்ட்
அதேபோல் தான் ரஜினியும். விஜய், ரஜினி இருவரும் படத்தின் டப்பிங் நடக்கும் முன்பு முழு சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் என்று அஜித்தை போல் குடைச்சல் கொடுப்பதில்லை. ஆனால் அஜித் படத்தின் டப்பிங்கிற்கு முன்பே தன்னுடைய மொத்த சம்பளத்தையும் செட்டில் செய்ய வேண்டும் என்ற கண்டிஷன் போட்டுவிடுகிறார் என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.