பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய அகிலன்! இதுதான் காரணமாம்
தமிழ் தொலைக்காட்சியில் கடந்த வாரங்களாக டிஆர்பியில் முன்னணி தொலைக்காட்சி சீரியலை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது பாரதி கண்ணம்மா சீரியல். லட்சுமி அம்மா யார் என்று பாரதி நடந்து கொண்டு வரும் காட்சிகளும், கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்தது என்ற உண்மை தெரிந்ததும் என பரபரப்பான சூழலை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. அடுத்து என்ன நடக்கபோகிறது என்று எதிர்ப்பார்த்த நிலையில் வெண்பா கதாபாத்திரத்தை சமீபகாலமாக பெரிதாக காட்டவில்லை.
அதற்கு காரணம் கர்ப்பமாக இருப்பதால் மட்டுமே. பாரதியின் தம்பியாக நடித்து வரும் அகிலன் தற்போது சீரியலில் இனி நடிக்க மாட்டார் என்று செய்திகள் வெளியாகியது. இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் பலர் என்ன ஆச்சி என்றும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அகிலன் பாரதி கண்ணம்மா சீரியலில் ஏன் விலகினேன் என்பதை கூறியுள்ளார்.
படங்களில் ரொம்ப பிஸியாக இருப்பதால் டேட் கொடுக்க கஷ்டமாக இருப்பதாலும், விஷால்31, பகிரா மற்றும் பிட்சா 3 படத்தில் நடிப்பதால் கொஞ்சம் கஷ்டமாக இருந்ததால் விலகினேன். படங்கள் முடிந்த பிறகு நடிக்க முடியாது, எனக்கு பதில் நடித்தவர் நடிக்கட்டும் இடையில் நான் வந்தால் நல்லா இருக்காது என்று கூறியுள்ளார் அகிலன். மேலும் அஞ்சலியுடன் சேர்ந்து ஒரு ஆல்பன் பாடலில் நடித்திருக்கோம். நல்ல ஒரு முடிவுக்கு நல்ல ஆரம்பம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவருக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் வேறொருவர் கமிட்டாகியுள்ளார் என்ற தகவலும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
