கமல் மகளின் தனிப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட நபர் யார்? உண்மையை கூறிய நடிகர் தனுஜ்..

kamalhaasan shrutihaasan tamilactress aksharahaasan tanujnirwani
By Edward Aug 21, 2021 03:07 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகளாக கமல் மகளாகவும் அறிமுகமானவர்கள் ஸ்ருதி, அக்‌ஷரா. ஸ்ருதி காதல் விஷயத்தில் சிக்கிய நிலையில் அவரது தங்கை அக்‌ஷரா ஹாசனும் காதல் கிசுகிசுக்களில் சிக்கி இருந்தார். சில வருடங்களுக்கு முன் நடிகை ரத்தி அக்னிஹோத்ரியின் மகன் நடிகர் தனுஜ் விர்வானியை காதலித்து வந்தார்.

சில வருடங்களுக்கு முன் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அக்‌ஷரா ஹாசனின் தனிப்பட்ட அறையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை யாரோ ஒருவர் வெளியிட்டு லீக் செய்திருந்தார். அது தனுஜ் விர்வானி தான் புகைப்படங்களை வெளியிட்டு இருப்பார் என்று செய்திகள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிகழ்வு நடந்து பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் தனுஜ் விர்வானி பிரபல ஆர்ஜே சித்தார்த் கண்ணனிற்கு பேட்டியளித்து பேசியுள்ளார். அதுபற்றி அவர் கூறியது, நாங்கள் சுமுகமாக பிரிந்த பிறகு நான் என் வேலையை பார்த்து வருகிறேன், அக்‌ஷராவுன் அவரது வேலை பார்த்து வருகிறார். தற்போது இருவரும் நணபர்களாக இருந்து வருகிறோம்.

இடையில் இந்த லீக் புகைப்படம் வெளியாகி என் கெரியரை நிறுத்தியது. அது தற்போது எனக்கு தேவையில்லாத ஒன்று என கூறியுள்ளார். மேலும், இதுபற்றி அக்‌ஷராஹாசனிடன் நான் கால் செய்து பேசினேன். இதை செய்தது நான் தான் என்று நம்புகிறாயா? என்று கேட்டேன். அதற்கு அக்‌ஷரா, அப்படியில்லை தற்போது அதுபற்றிய செய்திகள் பற்றி இப்போதைக்கு நான் பேச நினைக்க விரும்பவில்லை.

என் தந்தை தற்போது அரசியலில் இருப்பதால் அது இடைஞ்சலாகக்கூடாது என்று கூறி பேசியிருந்தார் என்று தனுஜ் விர்வானி குறிப்பிட்டு பேசியுள்ளார்.