நான் யார் தெரியுமா! பிரபல தயாரிப்பாளர், இயக்குநர் என விடாமல் டார்ச்சர் செய்த கமல் மகள் அக்‌ஷரா!

kamal naveen akshara haasan shalinipandey agnisiragugal
By Edward Sep 01, 2021 03:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உலகநாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் கமல் தன்னுடைய இரு மகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டார். அவர்கள் வாழ்க்கையை அவரவர் பார்த்துக்கொள்ளட்டும் என்று தற்போது தனியாக இருந்து அரசியல் நடிப்பு என பிசியாக இருந்து வருகிறார்.

மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் முன்னணி நடிகையாக தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் ஸ்ருதியை போன்று படங்கள் வெற்றி பெறவில்லை. தற்போது அக்னி சிறகுகள் என்ற படத்தில் இயக்குநர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் வலைபேச்சு விமர்சகர்கள் அவரை பற்றி கூறியது. ஷாலினி பாண்டேவிற்கு பதிலாக தான் அக்‌ஷரா ஹாசன் கமிட்டாகி நடித்து வருகிறார். அக்‌ஷரா ஹாசன் கொடுத்த டார்ச்சரால் தான் நடிகையை மாற்றினேன், அதற்கு அவரே பரவாயில்லை என்று தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம்.

படம் முடிந்தபிறகு அக்‌ஷரா ஹாசன் செய்த டார்ச்சர் அனைத்தையும் பிரஸ்மீட் வைத்து கூறுவேன் என்றும் கூறியுள்ளாராம். மேலும், இயக்குநர் நவீன் படப்பிடிப்பு தளத்தில் சார் என்று கூப்பிட யாரையும் அனுமதிக்க மாட்டாராம் பேர் சொல்லிதான் அழைக்கவேண்டுமாம். அதேபோல் நடிகை அக்‌ஷரா ஹாசனிடமும் இப்படியாக கூறி டார்ச்சர் செய்துள்ளார்.

அக்‌ஷரா ஹாசன் அதற்கு பதிலாக பேர் சொல்லி அழைத்த நவீனை பார்த்து நான் யார் தெரியுமா? மேடம்னு கூப்பிடுங்க என்று மிரட்டி படுமோசமாக நடந்து கொண்டுள்ளாராம் அக்‌ஷரா ஹாசன்.