பீரியட்ஸ் அபிஷ்டு இல்ல, பார்க்கிறவர்கள் பார்வை தப்பா இருக்கு!! கமல் மகள் அக்‌ஷரா ஹாசன்..

Kamal Haasan Gossip Today Akshara Haasan Periods
By Edward Aug 20, 2024 02:30 PM GMT
Report

கமல் மகள் அக்‌ஷரா ஹாசன்

உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக தமிழ் சினிமாவில் அஜித் குமார் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் நடாஷா என்ற ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை அக்ஷரா ஹாசன். இந்தியில் அபிதாப் பச்சன், தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியான சமிதாப் படத்தில் நடித்து சினிமாத்துறையில் காலெடி எடுத்து வைத்தார்.

பீரியட்ஸ் அபிஷ்டு இல்ல, பார்க்கிறவர்கள் பார்வை தப்பா இருக்கு!! கமல் மகள் அக்‌ஷரா ஹாசன்.. | Aksharaa Haasan Talk About Periods At Interview

கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிற்பு போன்ற படங்களில் சைட் ரோல் நடிகையாக நடித்திருப்பார். ஃபிங்கர் டிப் என்ற வெப் தொடரில் நடித்தப்பின் தற்போது அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா ஹாசன், மும்பையில் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார்.

பீரியட்ஸ்

சமீபத்தில் அளித்த பேட்டியில், பீரியட்ஸ் பற்றி பொது இடங்களில் பெண்கள் பேசவே தயங்குகிறார்கள். பீரியட்ஸ் அபிஷ்டு இல்ல, அதுஒரு சாதாரண விஷயம். இதன் மூலமாகத்தான் இந்த உலகத்திற்கு ஒரு உயிர் வருகிறது. இதை சிலர் தீட்டு என்று சொல்கிறார்கள்.

பீரியட்ஸ் அபிஷ்டு இல்ல, பார்க்கிறவர்கள் பார்வை தப்பா இருக்கு!! கமல் மகள் அக்‌ஷரா ஹாசன்.. | Aksharaa Haasan Talk About Periods At Interview

இதில் இருக்கும் நல்லதைத்தான் பார்க்க வேண்டும், பார்ப்பவர்களின் பார்வை தப்பாக இருக்கிறது, அவர்களுக்கு புரிதல் இல்லை என்று அக்‌ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.