உலகையே திரும்ப பார்க்க வைத்த ஆலியா பட்டியின் 168 கேரட் நெக்லஸ்..
ஆலியா பட்
பாலிவுட் சினிமாத்துறையில் வாரிசு நடிகையாக அறிமுகமாகி டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் பெரும் ஹீரோயினாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஆலியா பட். நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து ஒரு மகளை பெற்றெடுத்து வளர்த்து வரும் ஆலியா பட், குழந்தை பெற்றப்பின்பும் நடித்து வருகிறார்.

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து ஸ்லிம்மாக காணப்படும் ஆலியா பட், சமீபத்தில் நடந்த Cannes 2026 திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார். ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும் இந்நிகழ்ச்சியில், பிங்க் நிறத்தால் ஆன பிங்க் கோரல் நெக்லஸ் அணிந்து உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் ஆலியா.
168 கேரட் நெக்லஸ்
168 கேரட் எடையுள்ள அரியவகை ரத்தினங்களால் ஆன இந்த நெக்லஸ், பாரம்பரியத்தையும் நவீன ஸ்டைலையும் கச்சிதமாக இணைத்துள்ளது. இந்த பிங் நிற கோரல் கற்கள் மத்திய தரைக்கடலில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. புகழ்பெற்ற சப்யசாச்சி ஹை ஜூவல்லரி நிறுவனம் இந்த நெக்லஸை வடிவமைத்துள்ளதாம்.

இதனை சுற்றி நுணுக்கமான தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம். கேமரா வெளிச்சத்தில் ஜொலிப்பதற்காக ஒவ்வொரு ரத்தினமும் கையாலேயே மெருகூட்டப்பட்டுள்ளது. இந்த பிங்க் நிற நெக்லஸ் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

