மாலத்தீவில் தங்கையுடன் பிறந்த நாள்! கடற்கரை வீடியோவை வெளியிட்ட நடிகை ஆலியா பட்

birthdayparty aliabhatt Shaheen Bhatt
By Edward Mar 16, 2022 08:28 AM GMT
Report

பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மகேஷ் பட்டின் வாரிசாக கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை ஆலியா பட். 2012ல் வெளியான Student of the Year என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி 10 ஆண்டுகளில் முன்னணி நடிகையாகவும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் ஆலியா பட்.

கொரோனா லாக்டவுன்னுக்கு பிறகு பல படங்களை கையில் எடுத்து நடித்து வரும் ஆலியா ஆர் ஆர் ஆர், பிரம்மாஸ்ட்ரா, டார்லிங்ஸ் போன்ற படங்களில் நடித்து முடித்து இந்த வருடத்தில் வெளியாகவுள்ளது.

நேற்று அவரின் 29வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். நட்சத்திரங்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நிலை அவரது தங்கை சயீன் பட்டுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார்.

அங்குள்ள பீச்சிற்கு சென்று பிறந்தநாள் பார்ட்டியை கொண்டாடியுள்ளார். அங்கு எடுத்த பிகினி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை ஒரு மணி நேரத்தில் 9 லட்சம் ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.