மாபெரும் தோல்வியடைந்த புஷ்பா 2.. என்ன இப்படி ஆகிருச்சு! விளக்கம் கொடுத்த நபர்
உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் புஷ்பா 2 படம் வசூல் செய்ததாக அறிவித்தனர். ஆனால், மலையாளத்தில் இப்படம் மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இதுகுறித்து விநியோகஸ்தர் பேசியுள்ளார்.
சமீபத்தில் புஷ்பா 2 படத்திற்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் பங்கேற்ற விநியோகஸ்தர் கேரளாவில் புஷ்பா 2 படுதோல்வியடைந்து குறித்து பேசினார்.
இதில் "புஷ்பா 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாவும், அங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு கூட கிடைக்காத அளவுக்கு இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்ததாகவும் கூறினார். ஆனாலும், புஷ்பா 2 ஒரு வழக்கமான மலையாள பாணியில் உருவான படம் அல்ல, அதனால்தான் கொஞ்சம் தாமதமாக இணைப்பை ஏற்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும் தற்போது இப்படத்தை டிஜிட்டல் தளத்தில் அதிகமானோர் பார்த்து வருவதாக தெரிவித்த அவர், விரைவில் இப்படத்தை மீண்டும் முப்பரிமாண பதிப்பில் அங்கு வெளியிடுவோம் என்றும் கூறினார். கேரளாவில் புஷ்பா 2 படம் தோல்வியடைந்தது குறித்து அவர் பேசியது ஓரளவு தெளிவு கிடைத்தாலும், முழுமையாக கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.