அல்லு அர்ஜுனுக்காக 6 ஹீரோயின்களை புக் செய்யும் அட்லீ1! புகையும் பாலிவுட்..
அல்லு அர்ஜுன் - அட்லீ
தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் பான் இந்தியா நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். புஷ்பா, புஷ்பா 2 படத்திற்குப்பின் இயக்குநர் அட்லீயுடன் இணைந்துள்ளார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் அல்லது அனிரூத் இசையமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி பேசுபொருளாக மாறியிருக்கிறது.
பெரும்பாலும் அட்லீ படங்களில் ஹீரோயின்கள் இரண்டு பேராவது இருப்பார்கள். அந்தவகையில் அல்லு அர்ஜுனுக்காக உருவாகியிருக்கும் இந்த படத்தில் 6 ஹீரோயின்களை நடிக்கவைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 ஹீரோயின்கள்
இதற்காக தெலுங்கு, தமிழ், பாலிவுட் ஆகிய மொழி நடிகைகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளாராம். அந்தவகையில் ராஷ்மிகா மந்தனா, தீபிகா படுகோன், ஸ்ரீலீலா, கயாடு லோகர், பூஜா ஹெக்டே, ஜான்வி கபூர், மிருணால் தாகூர், பாக்யஸ்ரீ போர்ஸே உள்ளிட்ட நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாருக்கான், சல்மான் கான் போன்ற டாப் நடிகர்களே இரண்டு அல்லது மூன்று நாயகிகளுடன் தான் நடித்திருக்கிறார்கள். ஆனால் அல்லு அர்ஜுனுக்காக அட்லீ இப்படியொரு பிரம்மாண்ட நடிகைகளை தேர்வு செய்திருப்பது பாலிவுட்டே பரப்பை ஏற்படுத்தியுள்ளது.