லேடி சூப்பர் ஸ்டார் தான் வேண்டும்! பகத் பாசிலை ஓரங்கட்டிவிட்டு இந்த நடிகரை புக் செய்த இயக்குநர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. தற்போது அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களை தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அட்லீயின் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஒருசில படங்களில் கமிட்டாகிய நயன் பிரேமன், நேரம் உள்ளிட்ட ஹிட் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க கமிட்டாகினார்.
பாட்டு என பெயரிடப்பட்ட இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் ஜோடியாக கமிட்டாகி செய்து வெளியானது. இந்நிலையில் பகத் பாசிலுக்கு நடிகர் கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளதால் கால்ஷீட் சரியாக அமையவில்லை என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனிடம் கூறியுள்ளார்.
அதற்கு சம்மதித்த இயக்குநர் உடனே அந்த கதையை ஒதுக்கி வைத்துவிட்டு நடிகை நயன் தாராவை வைத்து நடிகர் பிரித்திவிராஜ் ஜோடியாக கோல்ட் என்ற பெயரிடப்பட்ட கதையில் நடிக்கவுள்ளாராம்.
அதன் அதிகாரத்தகவல் சமீபத்தில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் உறுதிபடுத்தியுள்ளார்.