ராஜா ராணி சீரியலில் இருந்து விலகிய ஆல்யா! அவருக்கு பதில் இவரா?

pregnant serial rajarani2 sanjeev alyamanasa
By Edward Mar 15, 2022 06:43 AM GMT
Report

பிரபல தொலைககாட்சி சீரியலில் சில ஆண்டுகளுக்கு முன் ராஜா ராணி என்ற் சீரியல் மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. சஞ்சீவ், ஆல்யா மானசா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

ரியல் ஜோடி

சீரியலில் இருவரும் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டு ரியல் ஜோடியாகி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சில மாதங்கள் சீரியலில் இருந்து ஆலியா விலகி இருந்தார். உடல் எடையை முற்றிலும் குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு வந்த ஆலியா ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சித்துவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இரண்டாம் முறை கர்ப்பம்

விறுவிறுப்பாக சென்ற நிலையில் ஆல்யா இரண்டாம் முறை கர்ப்பமானதை அறிவித்தார். அப்போதில் இருந்தே விலகிவிடுவாரா என்ற் கேள்வி ரசிகர்கள் பார்வையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த மாதம் இறுதிக்குள் ஆல்யா குழந்தையை பெற்றெடுப்பார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே சீரியலில் நடிக்கும் போது சேலையை வைத்து மறைத்து நடித்து வந்தாலும் கர்ப்பமாக இருப்பது அப்படியே அப்பட்டமாக தெரிந்து வந்தது. இதை கவனித்த சிலர் கிண்டல் செய்தும் வந்தனர். தற்போது ஆல்யா மானசா சீரியலில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அவருக்கு பதில் சித்துவின்ரியல் மனைவி ஸ்ரேயா நடிக்கவுள்ளார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் வேறொரு நடிகை நடித்துள்ளாராம். ஆல்யா விலகியப்பின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் லீக்காகியுள்ளது.