தனுஷுடன் மோத தயாரான நடிகை அமலா பால்!! சபாஷ் சரியான போட்டி...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தும் பாலிவுட், ஹாலிவுட் என்று பெருமை சேர்த்து வரும் நடிகர் தனுஷ் ராயன் படத்தினை இயக்கி நடித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள ராயன் படம் ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு போட்டியாக பல படங்கள் வரிசைக்கட்டி இருந்தாலும் அதே தேதியில் எந்த படமும் வெளியாகவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தனுஷின் ராயன் படத்திற்கு போட்டியாக நடிகை அமலா பால் களமிறங்கியிருக்கிறாராம். 2 ஆம் திருமணம் செய்து குழந்தையை சமீபத்தில் பெற்ற அமலா பால் லெவல் கிராஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படமும் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக ராயன் படத்திற்கு தமிழ்நாட்டில் அமலா பாலின் லெவல் கிராஸ் படம் டஃப் கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு முன் நடித்த அமலா பாலின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக லெவல் கிராஸ் படத்தின் பிரமோஷன்களிலும் கலந்து கொண்டு வருகிறார்.
கடைசியாக நடிகை அமலா பால், வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
