தகாத உறவு, விவாகரத்து சர்ச்சைக்கு பின்பும் தனுஷுடன் இணையும் அமலா பால்!..ஷாக்கான ரசிகர்கள்
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக்கி வரும் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதையடுத்து தனுஷின் 50 வது படத்தை அவரே இயக்க திட்டமிட்டுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியானது.
இப்படத்தில் ஹீரோயினாக திரிஷா நடிக்க போவதாக சில தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அதன் பிறகு சூரரைப் போற்று, வீட்ல விசேஷம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில் தனுஷின் 50 வது படத்தில் அமலா பால் நடிக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சமீபத்தில் தான் அமலா பால் தனுஷ் குறித்த செய்திகள் ஹாட் டாபிக்காக ஊடகங்களில் வெளியானது.
அது என்னவென்றால் அமலா பால் தனுஷ் vip படத்தில் ஷூட்டிங்கில் இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும், தனுஷ் தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் அமலா பால் வீட்டில் இருந்ததாக பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.