விவாகரத்துக்கு இதுதான் காரணம்! அவனுடன் பயந்து வாழ்ந்தேன்! உண்மையை உடைத்த நடிகை அமலாபால்
தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் சர்ச்சை நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். முதல் படமே அப்படி அமைந்ததால் அடுத்த படத்திற்காக காத்திருக்கும் போது மைனா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து புகழ் பெற்றார். இதையடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் கிடைத்து முன்னணி நடிகையாக களம் கண்டார்.
இயக்குநர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். இதற்கு பல காரணங்கள் கூறிய நிலையில், அமலா பால் பல வருடம் கழித்து ஏ.எல் விஜய்யுடன் வாழ்ந்த அனுபவங்களையும் விவாகரத்து பெற்றதற்கு பின் அனுபவித்த அனுபவங்களையும் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
விவாகரத்து செய்யும் போது என்னுடைய முடிவை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு பக்கபலமாக யாரும் நிற்காமல், பயமுறுத்தவே செய்தனர்.
அந்த சமயத்தில், நான் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், பயத்தோடு தான் வாழ்ந்தேன். என்னுடைய சந்தோஷம் மற்றும் மனநிலையை யாரும் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை என்று அமலாபால் தெரிவித்தார்.
சமீபத்தில் இதையெல்லாம் மறந்து வாழ்க்கையை ஜாலியாக தனது நண்பர்களுடன் நாட்களை கழித்து வருகிறார் அமலா பால்.