நான் நடிகை என்று கணவருக்கு தெரியாது, கர்ப்பகாலத்தில் தான்.. அமலாபால் ஷாக்கிங் பேட்டி

Amala Paul Tamil Cinema Actress
By Bhavya May 18, 2025 06:30 AM GMT
Report

அமலாபால்

தமிழில் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பிரபலமடைந்தவர் நடிகை அமலாபால்.

அப்பட வெற்றியால் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா ஆகியோர் படங்களில் நடித்தார். முன்னணி நாயகியாக இருந்தபோதே இயக்குநர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றார்.

அதற்கு பின், ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கு இலை என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.

நான் நடிகை என்று கணவருக்கு தெரியாது, கர்ப்பகாலத்தில் தான்.. அமலாபால் ஷாக்கிங் பேட்டி | Amala Paul Says Husband Dont Know She Is Actress

ஷாக்கிங் பேட்டி 

இந்நிலையில், அமலாபால் சினிமாவில் இருப்பது குறித்து தனது கணவருக்கு தெரியாது என்று கூறிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், "முதன் முதலில் நானும் என் கணவரும் கோவாவில் சாதித்தோம். அவர் குஜராத்தி என்றாலும் கோவாவில் தான் வசித்து வந்தார். அவருக்கு தென்னிந்திய படங்கள் பார்க்கும் பழக்கம் இல்லை.

அதனால் நான் ஒரு நடிகை என்பதே அவருக்கு தெரியாது. நானும் அதை காட்டிக்கொள்ளவில்லை. சில நாட்களுக்கு பின் அவருக்கு தெரிய வந்தது.

நான் கர்ப்பகாலத்தில் இருக்கும்போது தான் என்னுடைய படங்களை பார்த்தார். நான் விருது விழாவிற்கு சென்று விருது வாங்குவதையும், ரெட் கார்ப்பெட்டில் நடப்பதையும் அவர் மிகவும் வியப்பாக பார்த்தார்" என தெரிவித்துள்ளார்.  

நான் நடிகை என்று கணவருக்கு தெரியாது, கர்ப்பகாலத்தில் தான்.. அமலாபால் ஷாக்கிங் பேட்டி | Amala Paul Says Husband Dont Know She Is Actress