15 ஆயிரம் கோடி மதிப்பு!! அம்பானியின் Antilia மாளிகையின் 27வது மாடி ரகசியம்..
முகேஷ் அம்பானி
உலகின் கோடிஸ்வரர்களின் லிஸ்ட்டில் டாப் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, சமீபத்தில் தன்னுடைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தை பல ஆயிரம் கோடி செலவில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார்.
10 லட்சம் கோடிக்கும் மேல் சொத்துக்களை கடல் போல் சேர்த்து வைத்திருக்கும் அம்பானி குடும்பம், தினமும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அந்தவகையில் நீடா அம்பானி பயன்படுத்தும் ஒரு டீ கப் விலை மட்டும் ரூ 3 லட்சம் வரை இருக்கலாம் என்று சமீபத்தில் தகவல் வெளியானது.
மேலும், முகேஷ் அம்பானியின் இல்லத்தில் மொத்தம் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்கிறார்கள். அதிலும் அங்கு சமையல் செய்பவர்களுக்கு, ஆண்டிலியாவின் மாதச் சம்பளமாக ரூ. 2 லட்சம், ஆண்டு வருமானம் ரூ. 24 லட்சம் கொடுப்படுவதாகவும் தகவல் வெளியாகின.
Antilia மாளிகை
இந்நிலையில், மும்பையில் இருக்கும் அம்பானி - நீதா தம்பதியின் ஆண்டிலியா மாளிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 4 லட்சம் சதுர அடி கொண்ட இந்த மாளிகைக்கு மொத்தம் ரூ 15,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. அட்லாண்டிங் பெருங்கடலில் உள்ள பாண்டம் தீவின் பெயரை இந்த மாளிகைக்கு ஆண்டிலியா என்று வைக்கப்பட்டுள்ளது.
27 மாடிகள் கொண்ட இந்த மாளிகையில் 3 ஹெலிகாப்டர் தரையிரங்கும் வசுகளுடன் 173 உயரத்திலும் 30 ஆயிரம் சதுர மீட்டரிலும் கட்டப்பட்டிருக்கிறது.
Antilia மாளிகையின் 25 தளங்களை தவிர்த்து, முகேஷ் அம்பானியும் நீதாவும் பிள்ளைகளும் என மொத்த குடும்பமும் 26 மற்றும் 27வது மாடியில் வசித்து வருகிறார்கள். போதுமான இயற்கை வெளிச்சம் மற்றும் சரியான காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதால் நீதா அம்பானி 27வது மாடியில் வசிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.