திரிஷா விஜய்க்கு செய்வது தப்பு..25 ஏகர் நில விவகாரம்!! நடிகை அம்பிகா..
திரிஷா விஜய்
லண்டனில் சில நாட்களுக்கு முன் நடந்த அஜித் குமார் கலந்து கொண்ட கார் ரேஸிங்கிற்கு முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு தொடங்கிவைத்தார். அந்நிகழ்ச்சிக்கு நடிகை திரிஷாவும் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு பேசு பொருளானது.

இதை நடிகை அம்பிகா, திரிஷா லண்டனில் இருந்தால் என்ன? சீனாவில் இருந்தால் என்ன? ஒருவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், அது நமக்கு பிரச்சனை இல்லை என்று திரிஷாவுக்கு ஆதரவாக பேசியிருந்தாலும், இப்போது திரிஷா இடத்தில் நான் இருந்தால் இதை செய்ய மாட்டேன் என்று விஜய் ரசிகர்கள் மனதை குளிரவைக்கும் விதமாக பேசியிருந்தார்.
இதனை கேட்டதும் பத்திரிக்கையாளர் சே குவேரா, திரிஷாவுக்காக அம்பிகா எதற்காக பேசுகிறார்? அந்த காலத்து திரிஷா தான் அம்பிகா. அதனால் தான் அவர் சப்போர்ட் செய்கிறார். அவருக்கு எம்ஜிஆர் 25 ஏக்கர் நிலம் கொடுத்திருந்தார். அதைப்பற்றி அம்பிகா பேசுவாரா? அவங்க முதுகில் இருக்கிற அழுக்கை கழுவாமல் மத்தவர்களை பற்றி பேசக்கூடாது என்று விமர்சித்திருக்கிறார்.

அம்பிகா
இதனால் கடுப்பான அம்பிகா பேட்டியொன்றில் அவருக்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளார். அதில், என்னைப் பற்றி இரு அண்ணன் சே குவேரா பேசியிருந்தாரே, அந்த பேட்டியை நான் பார்த்தேன், அதில் 25 ஏக்கர் எம்ஜிஆர் இடமிருந்து எழுதி வாங்கியது பத்தலையா? நீங்க ஏன் திரிஷாவுக்கு சப்போர்ட்டா பேசுறீங்கன்னு கேட்கிறார்.
நான் அந்த காலத்து திரிஷா, அதனால்தான் அவர்களுக்கு சப்போர்ட் பண்றேன்னு சொல்லியிருக்கிறார். இப்போ எனக்கு ரெண்டு விஷயம் தெரியவேண்டும், நான் அந்த காலத்து திரிஷா என்றால், அந்த காலத்து விஜய் யார்? என்பது எனக்கு தெரிய வேண்டும்.
அதை சே குவேரே சொல்ல வேண்டும். மற்றொன்று, எனக்கு 25 ஏக்கர் நிலம் எம்ஜிஆர் கொடுக்கும்போது இவர்தான் வில்லேஜ் ஆபிஸராக இருந்தாரா? அந்த டாக்குமெண்ட் உங்களிடம் தானே இருக்கு, அதை என்னிடம் கொண்டு வந்து கொடுங்க, அதைவிற்றுவிட்டு உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை நான் தர்றேன் என்று அம்பிகா பதிலடி கொடுத்துள்ளார்.