அசிங்கப்படுத்திட்டு இருக்கீங்க... குரேஷியை தொடர்ந்து பிரியங்காவுக்கு ஆதரவாக பிக்பாஸ் அமீர்..

Priyanka Deshpande Star Vijay Cooku with Comali Manimegalai Amir ADS
By Edward Sep 20, 2024 10:07 AM GMT
Edward

Edward

Report

பிரியங்கா - மணிமேகலை

சின்னத்திரையில் தற்போது தீயாய் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் குக் வித் கோமாளி சீசன் 5ல் பிரியங்காவுக்கும் மணிமேகலைக்கும் ஏற்பட்ட பிரச்சனைதான்.

இது பற்றி மணிமேகலை விளக்கம் கொடுத்திருந்தாலும் விஜய் டிவி பிரபலங்களில் பலரும் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். இதுகுறித்து பிரியங்கா, தன் பங்கிற்கு எந்தவொரு கருத்தும் கூறாமல் இருந்து வருகிறார்.

அசிங்கப்படுத்திட்டு இருக்கீங்க... குரேஷியை தொடர்ந்து பிரியங்காவுக்கு ஆதரவாக பிக்பாஸ் அமீர்.. | Amir Clarify About Cwc Issue Priyanka Manimegalai

மேலும் விஜய் டிவி பிரபலங்களான குரேஷி, சுனிதா, நாஞ்சில் விஜயன் உள்ளிட்டவர்கள் தங்கள் கருத்துக்களை பிரியங்காவுக்கு ஆதரவாக பகிர்ந்து கொண்டனர்.

அமீர்

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரியங்காவின் நெருங்கிய தோழனாக மாறிய நடன கலைஞர் அமீர் குக் வித் கோமாளி பிரச்சனை குறித்து பகிர்ந்துள்ளார்.

எல்லோருக்கும் ஒரு வியாதி இருக்கிறது என்றால், ஒருத்தரின் தரப்பை மட்டுமே கேட்டு வேறொரு முடிவெடுப்பது தான். இரண்டு தரப்பில் இருந்தும் என்ன நடந்தது என்று எல்லோரும் ரியாக்ஷன் செய்திருக்க வேண்டும். அவ்வளவு அதிபுத்திசாலியாக இருக்கும் நீங்கள் இரு தரப்பில் இருந்தும் என்ன நடந்தது என்று புரிந்துகொண்டு பேசுங்கள்.

அசிங்கப்படுத்திட்டு இருக்கீங்க... குரேஷியை தொடர்ந்து பிரியங்காவுக்கு ஆதரவாக பிக்பாஸ் அமீர்.. | Amir Clarify About Cwc Issue Priyanka Manimegalai

ஒரு பொண்ணுக்கு சப்போர்ட் செய்து இன்னொரு பொண்ணை அசிங்கப்படுத்திட்டு இருக்கீங்க, இருவரும் பெண் தானே, அது இல்லாதது எனக்கு சங்கடமாக இருந்தது. நான் பிரியங்கா அக்காவிற்கு தான் சப்போர்ட் பண்ணுவேன். நான் பிக்பாஸில் இருக்கும் போதில் இருந்தே பிரியங்காவின் பெயரை குறிப்பிடுவேன்.

பிரியங்கா விஷயத்தில் எல்லைமீறிய மணிமேகலை!! விஜய் டிவி எடுத்த அதிரடி வழக்கு...

பிரியங்கா விஷயத்தில் எல்லைமீறிய மணிமேகலை!! விஜய் டிவி எடுத்த அதிரடி வழக்கு...


அக்கா மேல் தப்பு இல்லை

நான் பிரபு தேவாவுடன் நெருக்கமாக இருக்க காரணம் பிரியங்கா தான். அவள் கூட இருக்கிறவர்களை கேட்டால் தெரியும், அவள் யாரையும் கீழத்தூக்கி மிதிக்கும் கேரக்டர் கிடையாது. ஒருவருக்கு திறமை இருப்பது தெரிந்தால் எந்தமட்டத்திற்கும் சென்று அவர்களை தூக்கிவிடுவாள்.

அசிங்கப்படுத்திட்டு இருக்கீங்க... குரேஷியை தொடர்ந்து பிரியங்காவுக்கு ஆதரவாக பிக்பாஸ் அமீர்.. | Amir Clarify About Cwc Issue Priyanka Manimegalai

அப்படியென்றால் நான் அவள் கூட தானே இருக்கணும். குரேஷி, சுனிதா, ஷகீலா, டிஜே பிளாக், பூஜா எல்லாம் சொல்லும் போது அதுதானே உண்மையாக இருக்கும். நானும் பாவனியும் குக் வித் கோமாளி செட்டிற்கு சாதாரணமாக சென்று பிரியங்கா கேரவனுக்கு சென்றோம். அப்போது நடந்த விஷயம் எல்லாமே பிரியங்கா எங்களிடம் கூறினார்கள்.

இப்போது குரேஷி கூறியதை போன்று தான் செட்டில் இருப்பவர்கள் அக்கா மேல் தப்பு இல்லை என்று சொன்னார்கள். திவ்யா துரைசாமி வெளியில் போகும் போது பிரியங்கா நான் பேசட்டுமா என்று பர்மிஷன் கேட்டாங்களாம்.

அது அவளுக்கு தேவையில்லாத ஒன்று, அப்போதுதான் பிரச்சனை ஆரம்பித்தது. இங்கே எங்க ஆங்கர் என்பது ஒன்று வந்தது என்று எனக்கு தெரியவில்லை என்று அமீர் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.