அமீர்-பாவ்னிக்கு இந்த தேதியில் திருமணமா!! உண்மையை கூறிய பிக்பாஸ் காதல் ஜோடி..

Ajith Kumar Bigg Boss Pavani Reddy Thunivu
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் காதல் மலர்ந்து தற்போது ரியல் ஜோடிகளாக ஜொலித்து வருபவர்கள் தான் அமீர்-பாவ்னி.

ஆரம்பத்தில் இருந்து அமீரின் காதலை ஏற்க தயக்கம் காட்டிய பாவ்னி, பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சி நிறைவடையும் தருணத்தில் காதலை ஏற்றுக்கொண்டார்.

அதன்பின் சில ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த காதல் ஜோடி நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் அதே காதல் ஜோடிகளாக நடித்தனர்.

இவர்களின் காதல் விசயம் அறிந்த அஜித் அவர்களுக்கு சிறந்த அறிவுரைகளை கூறியதாக பாவ்னி கூறியிருந்தார்.

இந்நிலையில் அமீர்-பாவ்னி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் இருவருக்கும் பிப்ரவரி 15ஆம் தேதி திருமணமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாவ்னி, அப்படியொன்றும் இல்லை நான் சும்மா அந்த தேதி அப்டேட்டை கூறினேன்.

திருமணம் இருக்கிறது ஆனால் இப்போது இல்லை. சினிமாவில் நடிக்க இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம் என்று அமீர் கூறியிருந்தார்.