நாய் கடிச்சு கொதர்ர வரைக்கும் பெத்தவங்க எங்கப்போனீங்க!! நடிகை அம்மு பேச்சை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..
நீயா நானா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா ஷோவில் சமீபத்தில் நாய்கள் ஆதரிப்பவர்களுக்கும், ஆதரவு கொடுக்காதவர்களுக்கும் இடையிலான விவாதம் நடந்தது. இந்த ஷோவில் கலந்துகொண்ட பல பிரபலங்கள் தாங்கள் பேசிய நிறைய விஷயங்கள் கட் செய்யப்பட்டு ஒளிபரப்பானதாக குற்றம் சாட்டினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அம்மு மற்றும் படவா கோபியை நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்து வருகிறார்கள். இதனையடுத்து நடிகை அம்மு, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், நீயா நானா நிகழ்ச்சி மொத்தம் 8 மணிநேரம் ஷூட்டிங் நடந்தது. அதில் வெறும் 45 நிமிடங்கள் தான் காட்டப்பட்டது என்றும் தங்கள் தரப்பில் பேசிய நிறைய விசயங்களை எடிட் செய்துவிட்டதாகவும் கூறி பேசினார்.
நடிகை அம்மு
இது ஒருபக்கம் இருக்க நடிகை அம்மு, யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், எனக்கு இருக்குற கோபமான விஷயம் என்னவென்றால், குழந்தைகளை நாய் கடிச்சு கொதரும் வரை பெற்றோர்கள் எங்க போனிங்க...அங்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் எங்கே போனிங்க, அந்த குழந்தைகளுடைய அழுகை சத்தம் உங்களுக்கு கேட்கவே இல்லையா.
சாதாரணமாக ஒரு நாயை விரட்டக்கூடியவர்கள், அது குழந்தையை கடிக்கும் வரை என்ன செய்தார்கள். சாதாரணமாக எங்களுடைய நாலு கால் இருக்கும் ஜீவன் வித்தியாசமாக கத்தினாலே நாங்கள் ஓடி வந்து பார்ப்போம்.
குழந்தை நாய்க்கடியால் கதறுகிறது என்றால் அதை பார்த்துக்கொண்டு சும்மாவா இருந்தீங்க, அந்த குழந்தையை காப்பாத்தனும்ணு யாருக்குமே தோணலையா என்று கேள்வியை எழுப்பியுள்ளார். இதனை வைத்து நெட்டிசன்கள் கடுமையாக நடிகை அம்முவை சாடியும் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.