விவாகரத்து செய்யாமலே இன்னொருவருடன் ரகசிய தொடர்பு! ரஜினி பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..

Rajinikanth Amy Jackson Indian Actress
By Edward Jun 06, 2022 05:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம் மதராசபட்டினம். இப்படத்தில் கதாநாயகியாக லண்டன் மாடல் அழகியான எமி ஜாக்சன் நடித்திருப்பார்.

மிகப்பெரிய ஹிட் கொடுத்த இப்படத்திற்கு பிறகு தாண்டவம், ஐ, கெத்து, தங்க மகன், 2.0 போன்ற படங்களில் நடித்தார். George Panayatiou என்பவரை ரகசியமாக காதலித்து கர்ப்பமாகிய எமி 2019ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஒரு மகன் பிறந்த நிலையில் எமி ஜாக்சன் யாருக்கும் தெரியாமல் தன் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். சமீபகாலமாக அமெரிக்க பாடகருடன் ரகசிய தொடர்பில் இருந்து தனிமையில் இருந்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.

தற்போது இருவரும் உறுதி செய்துள்ளனர். அமெரிக்க பாடகர் எட் வெஸ்ட்விக் என்பவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

GalleryGallery