ஆனந்த் அம்பானியின் மாமியார் வாங்கிய ஆடம்பர குடியிருப்பு!! விலையை கேட்டா ஆடிப்போயிருவீங்க..
முகேஷ் அம்பானி - நீடா அம்பானி
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியினர் கடந்த ஜூலை மாதம் தனது மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தனர்.
பல ஆயிரம் கோடி செலவில் நடந்த இத்திருமணத்தில் அம்பானி குடும்பத்தினர் விலையுயர்ந்த ஆடை அணிகள் அணிந்து மிரளவைத்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பு
இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் மாமியாரும் ராதிகா மெர்ச்சண்ட்டின் தாயாருமான ஷைலா மெர்ச்சண்ட், தெற்கு மும்பையில் உள்ள பிரஸ்டீஜ் ஓசியன் டவரில் 2565 சதுர அடி மதிப்புள ஒரு அடுக்குமாடி குடியிருப்பினை வாங்கியிருக்கிறார்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பு 2,482 சதுர அடி பரப்பளவிலும், 83 சதுர அடி பால்கனியுடன் வருகிறது. இதன் மதிப்பு ரூ. 20.76 கோடியாம். மேலும் அபார்ட்மெண்ட்டிற்கான பரிவர்த்தனை அக்டோபர் 14 ஆம் தேதி பதிவு செய்யப்படவுள்ளதாம்.
நான்கு கார் பார்க்கிங் இடங்கள் இருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு முத்திரை தொகை 1.03 கோடியும் பதிவுக் கட்டணம் 30 ஆயிரம் ரூபாய் செலுத்தியும் இருக்கிறார்களாம்.
ஒரு சதுர அடி ரூ.80 ஆயிரம் என்ற விலையில் பெங்களூரைச் சேர்ந்த பிரெஸ்டீஜ் குழுமத்தின் (Prestige Group) பிரெஸ்டீஜ் புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Prestige Projects Private Limited) விற்பனை செய்திருக்கிறதாம்.