அம்பானி முன்பே கால்மேல் கால்போட்டு உக்காந்து பேசுற குடும்பத்தின் வாரிசு!! பழைய கார்ல வராங்க..
மினி கூப்பர் கேரியோ
இந்தியாவில் இருக்கும் தொழிலதிபர்கள் மற்றும் பணக்கார்களின் வாரிசுகள் பலரும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருவர்கள். சந்தையே எந்த பொருள் அறிமுகம் செய்யப்பட்டாலோ அதை உடனே வாங்கிவிடுவார்கள். அதேபோல் சொகுசு கார்கள் சந்தியில் புதிதாக அறிமுகம் செய்தாலோ அதை வாங்கிவிடுவார்கள்.
அப்படி பொது இடங்களில் ஒவ்வொரு முறை செல்லும் போது விதவிதமான சொகுசு கார்களில் செல்வார்கள். ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரின் மகள் பழைய காரில் வந்திறங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது 13 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட மினி கூப்பர் கேரியோ என்ற காரில் வந்து இறங்கியவர் அனன்யா பிர்லா. செல்வாக்குமிக்க தொழிலதிபரான குமார் மங்கலம் பிர்லாவின் மகள் தான் அனன்யா பிர்லா.
குமார் மங்கலம் பிர்லாவின் மகள்
அம்பானி முன்பே கால் மேல் கால் போட்டு உக்கார்ந்து பேசும் அளவிற்கு மிகப்பெரிய உச்சத்தில் இருந்தவர்தான் பிர்லா குடும்பத்தினர். அப்படிப்பட்ட குடும்பத்தின் வாரிசான அனன்யா பிர்லா 13 ஆண்டுகளுக்கு முன் எடுத்த காரில் வந்து இறங்கியது மும்பை வட்டாரத்தில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
குமார் மங்கலம் பிர்லா மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 2.50 லட்சம் ரூபாயாம். சமீபத்தில் தனது தோழியான ஜான்வி கபூருக்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான லம்போகினி காரை பரிசாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.