வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட்!! நடிகை அனன்யா நாகல்லா ஓபன் டாக்..
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
அனன்யா நாகல்லா
தெலுங்கான மாநிலம் கம்மம் மாவட்டம் சத்துப்பள்ளியை சேர்ந்த அனன்யா நாகல்லா, சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக குறும்படங்களில் நடித்தவர், பின் மல்லேஷம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். அதன்பின் வக்கீல் சாப், பிளேபேக், மேஸ்ட்ரோ, சாகுந்தலம், தந்த்ரா, பொட்டேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
அட்ஜெஸ்ட்மெண்ட்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சினிமா துறையில் எப்போதும் பெரும் விவாதப் பொருளாகவும் சர்ச்சையாகவும் இருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை கூறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதில், என்னுடைய சினிமா பயணத்தில் இதுவரை எனக்கு அதுபோன்ற எந்தவொரு கசப்பான, விரும்பத்தகாத அனுபவங்களும் ஏற்பட்டதில்லை என்று ஓபனாக பேசியிருக்கிறார் நடிகை அனன்யா நாகல்லா.