பெண்ணாக மாறிய முன்னாள் கிரிக்கெட் விரர் மகன்!! ஆஸி.மகளிர் கிரிக்கெட்டில் அனுமதி..

Indian Cricket Team Australia Cricket Team Transgender
By Jai Aug 27, 2026 11:30 AM GMT
Report

ஆர்யன் பங்கர்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான ஆர்யன் பங்கர், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார்.

பெண்ணாக மாறிய முன்னாள் கிரிக்கெட் விரர் மகன்!! ஆஸி.மகளிர் கிரிக்கெட்டில் அனுமதி.. | Anaya Bangar Set To Return To Cricket Australia

16 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், 19 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் புதுச்சேரி அணிக்காக்வும், 23 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் மும்பை அணிக்காகவும் விளையாடி வந்தார்.

2023ல் பெண்ணாக மாறப்போவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தவர், ஹார்மோன், மாற்று சிகிச்சையை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தாய்லாந்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலமாக தான் முற்றிலும் பெண்ணாக மாறிவிட்டதாகவும் அறிவித்தார் ஆர்யன் பங்கர்.

பெண்ணாக மாறிய முன்னாள் கிரிக்கெட் விரர் மகன்!! ஆஸி.மகளிர் கிரிக்கெட்டில் அனுமதி.. | Anaya Bangar Set To Return To Cricket Australia

இந்நிலையில் மகளிர் போட்டிகளான பிக்-பாஷ் தொடரில் விளையாட வேண்டும் என்று விருப்பப்படும் அனயா பங்கர், இதற்காக டெஸ்டோஸ்டிரோன் சோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ஆஸி.மகளிர் கிரிக்கெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தகவலின் படி, திருநங்கையாக மாறிய வீரர் கிரிக்கெட் விளையாடத் தகுதிபெற, டெஸ்டோஸ்டிரோன் அளவு, 12 மாதங்களுக்கு 10 nmol/L-க்கும் (நானோமோல்கள்/லிட்டர்) குறைவாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

பெண்ணாக மாறிய முன்னாள் கிரிக்கெட் விரர் மகன்!! ஆஸி.மகளிர் கிரிக்கெட்டில் அனுமதி.. | Anaya Bangar Set To Return To Cricket Australia

ஒருவேளை இந்தளவிற்கு மேலிருந்தால், கடந்த 2023ல் விதிக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவின்படி, மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதில் தடைவிதிக்கப்படும்.

அந்தவகையில், அனயா பங்கருக்கு நடத்தப்பட்ட சோதனையில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறிப்பிட்ட அளவைவிட குறைவாக இருப்பதால் அவருக்கு ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால், அவர் அடுத்தாண்டு 2027 மார்ச்சில் நடைபெறும் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.