தனுஷை நம்பிதான் வேலையை விட்டு வந்தேன்!! அன்பே டயானா பட ஹீரோயின் ஓபன் டாக்...

Dhanush Tamil Actress Anbe Diana
By Jai Jul 26, 2026 04:15 AM GMT
Report

நடிகர் தனுஷ் இயக்கி வெளியான படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரம்யா ரங்கநாதன். இப்படத்திற்கு பின் பாரி இளவழகன் இயக்கத்தில் அன்பே டயானா படத்தில் ஹீரோயினாக நடித்தார். படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரம்யாவுக்கு கொடுத்து வருகிறது.

தனுஷை நம்பிதான் வேலையை விட்டு வந்தேன்!! அன்பே டயானா பட ஹீரோயின் ஓபன் டாக்... | Anbe Diana Ramya Ranganathan Reveals Dhanush

இந்நிலையில் யூடியூப் சேனலுக்கு ரம்யா அளித்த பேட்டியொன்றில், நான் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன். என்னுடைய நடனத்தை பார்த்து தனுஷுக்கு பிடித்துவிட்டதால் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் என் அருகே தனுஷ் இருந்தார். அவர் வழிகாட்டினார்.

அப்படம் முடிந்தப்பின் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. நான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டபோது பெரிதாக தெரிந்தது. ஏனென்றால் மாதம் மாதம் நிலையான வருமான வந்தது.

தனுஷை நம்பிதான் வேலையை விட்டு வந்தேன்!! அன்பே டயானா பட ஹீரோயின் ஓபன் டாக்... | Anbe Diana Ramya Ranganathan Reveals Dhanush

தனுஷ் சார்தான் என்னிடம், என்னை நம்புங்கள், உங்களுக்கு பெரிய எதிர்காலம் சினிமாவில் இருக்கிறது. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைக்காதீர்கள், கண்டிப்பாக என்னை நம்பி வாருங்கள் என்று கூறினார். அதை நம்பி வேலையை விட்டுவிட்டேன். அந்த முடிவை எடுத்தால்தான் அடுத்தக்கட்டத்திற்கு போக முடியும் என்று எனக்கும் தோன்றியது என்று ரம்யா ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.