பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினியா? அப்ப மாகாபா கதி என்ன..

anchor priyanka television biggboss5
By Edward Sep 08, 2021 09:00 AM GMT
Edward

Edward

Report

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தற்போது பெரியளவில் பேசப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த 4 ஆண்டுகளாக 4 வது சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஆண்டினை போல கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததால் இந்த வருடமும் தள்ளிச்சென்றது. இந்நிலையில் பிக்பாஸ் 5 சீசன் ஆரம்பிக்கவுள்ளதாக நிகழ்ச்சியின் பிரமோ வீடியோ வெளியாகியது.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் யார் யார் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது. தற்போது விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் பிரியங்கா. பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் அவர் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் மாகாபா தனியாக இருப்பாரோ என்று கூறி ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகிறார்கள். பிரியங்கா தரப்பில் இருந்து பிக்பாச் குழுவிடமிருந்தும் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகமல் இருக்கிறது.