என் காதலர் உடல் ரீதியாகும் மன ரீதியாகவும் துன்புறுத்தினார்.. ஆண்ட்ரியா சொன்ன ஷாக்கிங் நியூஸ்
Andrea Jeremiah
Indian Actress
Tamil Actress
Tamil Singers
Actress
By Dhiviyarajan
நடிகை ஆண்ட்ரியா பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒரு பக்கம் நடிப்பு, மறுபக்கம் இசை என இரண்டிலும் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் பேட்டியில் கலந்துகொண்ட ஆண்ட்ரியா, திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ஒரு கட்டத்தில் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று கவலைப்பட்டதாகவும், ஆனால் இப்போது திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லை. கடந்த சில வருடங்களில் திருமணம் செய்துகொண்ட சிலர் மகிழ்ச்சியாக இல்லை. நிறைய பேர் திருமணம் செய்துகொள்ளாமல் மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள்.
மேலும் அவர் கூறுகையில், என் காதலர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தினார். இந்த விஷயத்தால் மிகுந்த மனவுளைச்சலில் இருந்தேன். இதனால் தான் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தேன் என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.