15 நிமிஷம் ஆடையின்றி நடிக்க முடியாது? வாய்ப்பிற்காக இப்படியொரு முடிவில் நடிகை ஆண்ட்ரியா..

Andrea Jeremiah
By Jai Apr 26, 2022 09:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஆண்ட்ரியா.

இதையடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த ஆண்ட்ரியா சினிமா கேரியரில் தரமணி மற்றும் வடசென்னை மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்தது. அவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படங்கள் வெளியாகியது.

இப்படங்களை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கினின் பிசாசு 2 வில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. இப்படத்தினை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆண்ட்ரியா பகிர்ந்து கொண்டுள்ளார். லாக்டவுன் சமயத்தில் ஒரு ஆண்டு படங்களில் நடிககாமல் இருந்தேன்.

அப்படியொரு நேரத்தில் கிடைத்த வாய்ப்பு தான் பிசாசு 2. தரமணி மற்றும் வடசென்னை படங்களில் எப்படி ஆரம்பத்தில் நடிக்க மறுத்து பின் நடிக்க ஒப்புக்கொண்டேனோ அந்த அளவிற்கு பிசாசு 2 படத்திலும் நடிக்க முடியாது என தோன்றியது.

இப்படத்தில் இதுவரையில்லாத நடிப்பினை மக்கள் என்னை பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார். ஆரம்பத்தில் ஆடையின்றி 15 நிமிடம் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியதால் பின்வாங்கினேன்.

ஆனால் கதை தரமானதாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார் ஆண்டிரியா. வரும் ஏப்ரல் 29 மாலை 5 மணிக்கு பிசாசு 2 படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.