இளையராஜாவை புகழ்ந்து யாரை தாக்குகிறார் ஆண்ட்ரியா..இப்படி சொல்லி இருக்காங்களே..
ஆண்ட்ரியா
தென்னிந்திய சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் நடிகை ஆண்ட்ரியா, தற்போது ஒருசில படங்களில் நடித்து லைவ் கான்செட் நடத்தியும் வருகிறார். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஆண்ட்ரியா, சமீபத்திய பேட்டியொன்றில் பேசிய விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அதில், கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று இளையராஜாவின் பாடல்களை பாடினால் இப்போது அவ்வளவு வரவேற்பு. அப்பாடல்கள் எல்லாம் நான் பிறப்பதற்கு முன் வந்தவை.
ஆனாலும் இளைஞர்கள் அவ்வளவு ரசிக்கிறார்கள். சில பாடல்கள் 15 நொடிகள் பிரபலமாக இருந்துவிட்டு அடுத்த பாடல் வரும்போது மறந்துபோகலாம்.

ஆனால் காலத்தை கடந்து நிற்கும் இசை எப்பவும் அப்படியே இருக்கும் என்று ஆண்ட்ரியா பேசியுள்ளது பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருகிறது.
வேண்டுமென்ற அனிருத்தை
மறைமுகமாக தாக்கி இளையராஜாவை
புகழ்கிறாரோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில்
எழுந்துள்ளது.