உண்மையில் அஜித், நயன்தாரா இப்படிப்பட்டவர்கள் தான்!! வெளிச்சம் போட்டு சொன்ன ரீல் மகள்
தமிழ், மலையாளம் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் அனிகா. இவர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித் குமாரின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையடுத்து இவர் அஜித்துடன் சேர்ந்து விஸ்வாசம் படத்தில் நடித்தார். 18 வயதான அனிகா தற்போது இளம் ஹீரோயினாக வலம் வருகிறார்.
இவர் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள 'ஓ மை டார்லிங்' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் அனிகா படுக்கை அறை மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடித்திருந்தார்.
போஸ்டிவ், நெகடிவ்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அனிகாவிடம் தொகுப்பாளர் அஜித், நயன்தாராவின் பாசிடிவ், நெகடிவ்வான விஷயங்களை சொல்ல வேண்டும் என்று டாஸ்க் வைத்தார்.
அதற்கு அனிகா, அஜித் சார் மிகவும் நல்ல மனிதர், கருணை குணம் கொண்டவர் இதெல்லாம் பாசிட்டிவ்வான விஷயம். ஆனால் நெகடிவ், அவர் அதிகமாக பேசுவார்.
நயன்தாராவும் மிகவும் கருணை குணம் கொண்டவர். அவரின் நெகடிவ் விஷயம், அதிக நேரம் மேக்கப் போடுவது தான் என்று அனிகா கூறியுள்ளார்.