லிப் லாக் காட்சிகளில் நடிக்க இது தான் காரணம்.. 18 வயதான அஜித் ரீல் மகள் விளக்கம்
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா. இதையடுத்து இவர் மீண்டும் நடிகர் அஜித்துடன் சேர்ந்து விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள "ஓ மை டார்லிங்" படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில் அவர் படுக்கை அறை மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடித்திருப்பார்.
இதனால் ரசிகர்கள், 18 வயதிலேயே அனிகா கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

விளக்கம்
இந்நிலையில் இது போன்ற காட்சிகளில் நடித்ததற்கு அனிகா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், "நான் நடித்துள்ள இப்படத்தில் லிப் லாக் காட்ச்சிகள் தவிர்க்க முடியாத ஒன்று. இயக்குனர் என்னிடம் இப்படத்தை குறித்து விவரிக்கும் போது படுக்கை அறை மற்றும் லிப் லாக் காட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இந்த படத்திற்கு இது போன்ற காட்சிகள் தேவைப்பட்டதால் தான் நடித்தேன். இப்படம் வெளியான பிறகு பாருங்கள் ஆபாசமாக தெரியாது" என்று கூறியுள்ளார்.
