அனிருத்தின் தேவரா பாடல் சர்ச்சை!! கலாய்த்து வருபவர்களுக்கு சிங்கள இசையமைப்பாளரின் பதில் இதுதான்..

Anirudh Ravichander Janhvi Kapoor Gossip Today N. T. Rama Rao Jr.
By Edward Aug 07, 2024 09:30 AM GMT
Report

இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தேவரா. இப்படத்தில் ஹீரோயினாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் போஸ் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக ககூறப்படுகிறது.

அனிருத்தின் தேவரா பாடல் சர்ச்சை!! கலாய்த்து வருபவர்களுக்கு சிங்கள இசையமைப்பாளரின் பதில் இதுதான்.. | Anirudh Copying Devara Song Chamath Sangeeth Reply

இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'பத்த வைக்கும்' என்ற பாடல் வெளியாகியுள்ள இப்பாடல் இலங்கை பாடகி யோஹானி பாடிய Manike Mage Hithe பாடலை அப்படியே காப்பி அடித்திருக்கிறார். ஏற்கனவே இந்தியில் Thank God படத்தில் இப்பாடல் இடம் பெற்றிருக்கும். ஆனால் அதையே அனிருத் காப்பி அடித்து இசையமைத்திருப்பதை நெட்டிசன்கள் கண்டபடி கலாய்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் மணிகே மகே இதே பாடலை இசையமைத்த சமத் சங்கீத், இதற்கு ஒரு பதிலை அளித்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் பிரபலம் இதை விமர்சித்த நிலையில், அந்த வீடியோவை சமத் சங்கீத் அவரது சோசியல் மீடியா பக்கத்தில், அனிருத்தின் படைப்புகளை எப்போதும் ரசிப்பவன் நான்.

அனிருத்தின் தேவரா பாடல் சர்ச்சை!! கலாய்த்து வருபவர்களுக்கு சிங்கள இசையமைப்பாளரின் பதில் இதுதான்.. | Anirudh Copying Devara Song Chamath Sangeeth Reply

என் பாடலான மணிகே மகே ஹிதே பாடலை போன்று ஒரு பாடலை இசையமைக்க அவருக்கு தூண்டுகோலாக என் பாடல் அமைந்தது எனக்கு மகிழ்ச்சி தான் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் சமத் சங்கீத்தை பாராட்டியும் வருகிறார்கள்.

Gallery