அனிருத்துக்கு திருமணம்..ஆனால், மணப்பெண் கீர்த்தி சுரேஷ் இல்லையாம்
Keerthy Suresh
Anirudh Ravichander
By Kathick
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்துக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி சமீபகாலமாகவே திரை வாட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதுகுறித்து அனிருத் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
மேலும், நடிகை கீர்த்தி சுரேஷும் அனிருத்தும் காதலிக்கிறார்கள் என்றும் சில தகவல்கள் வெளிவந்தது. விரைவில் இருவருக்கும் திருமணம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இதுவெறும் வதந்திதான் என்று அதன்பின் தெரியவந்தது.
இந்நிலையில், தற்போது இசையமைப்பாளர் அனிருத்துக்கு அவரது வீட்டின் திருமணத்திற்கு பெண் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்முலம் அனிருத்துக்கு விரைவில் திருமணம் என்று திரை வட்டாரங்கள் கூறுகின்றன.