சிம்புவின் அரசன் படத்திற்காக அனிருத் வாங்கியிருக்கும் சம்பளம்.. முழு விவரம் இதோ

Anirudh Ravichander
By Kathick Nov 15, 2025 02:23 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவர் இசையில் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ஜனநாயகன் மற்றும் LIK.

இதுமட்டுமின்றி அரசன் படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதை நாம் அறிவோம். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த கிலிம்ப்ஸ் வீடியோ படு வைரலானது. அதிலும் அனிருத்தின் இசை வேற லெவலில் இருந்தது.

சிம்புவின் அரசன் படத்திற்காக அனிருத் வாங்கியிருக்கும் சம்பளம்.. முழு விவரம் இதோ | Anirudh Salary For Arasan Movie

இசையமைப்பாளர் அனிருத் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசன் படத்திற்காக இவருக்கு சம்பளம் தரவில்லையாம்.

அதற்கு பதிலாக அரசன் படத்தின் ஆடியோ உரிமையை கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ உரிமை தற்போது ரூ. 13 கோடி வரை மதிப்பு என்றும் படம் வெளிவரும்போது இது இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.