ராக்ஸ்டார் அனிரூத்திற்கு பிடித்த நடிகை யார்தெரியுமா! அந்த பார்ட்டி ஹீரோயின் கிடையாதாம்..

supersinger aniruth
By Edward Sep 06, 2021 06:35 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ராக்ஸ்டார் என்ற பெயரை பெற்று கொடிக்கட்டி பறந்து வருபவர் அனிரூத் ரவிசந்திரன். தனுஷின் 3 படத்தில் ஆரம்பித்து இன்று மாஸ்டர், டாக்டர், பீஸ்ட், விக்ரம் படங்கள் வரை அவரின் இசைக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அட்லீயின் இயக்கத்தில் கிங்காங் ஷாருக்கான், நயன் தாரா நடித்து வரும் படத்திற்கு பின்னணி இசைக்கு அனிரூத் தான் அமைத்து தருவதாக செய்தியும் வைரலாகியது. அந்தவகையில் நடிகைகளுடன் நெருக்கமாக ஆரம்பகாலத்தில் இருந்து சில சர்ச்சையிலும் சிக்கி வந்தார் அனிரூத். சமீபத்தில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் செமி பைனல் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்ட அனிரூத், தனக்கு என்ன பிடிக்கும் என்ற டாஸ்க்கை போட்டியாளர்களுடன் கூறியுள்ளார்.

அதில் ஃபேவரைட் நடிகை யார் என்ற கேள்விக்கு நடிகை நயன் தாராவின் பெயரை எழுதி தெரிவித்துள்ளார். ஆனால் சில ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் இல்லையா என்று கிண்டலடித்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

ராக்ஸ்டார் அனிரூத்திற்கு பிடித்த நடிகை யார்தெரியுமா! அந்த பார்ட்டி ஹீரோயின் கிடையாதாம்.. | Aniruth Favourite South Actress Viral