வெண்பாவுக்கு திருமணமாகலையா? உண்மையை நாசுக்காக உடைத்த அஞ்சலி! பாரதி கண்ணாமா..

serial television bharathikannamma venba
By Jai Sep 03, 2021 02:00 PM GMT
Report

தற்போது தமிழ் தொலைக்காட்சி சேனலில் டிஆர்பியை அதிரவைத்து வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. முன்னணி டிவி சீரியல்களை உடைத்து கீழே தள்ளியது பாரதி கண்ணம்மா. அந்தவகையில் சமீபத்திய எபிசோட்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக கண்ணம்மா பாரதிக்கும் - வெண்பாவிற்கும் தான் திருமணமாகியது என்று நினைத்து கொண்டிருந்த காட்சிகள் அமைந்திருக்கும்.

தற்போது தொலைக்காட்சி பிரமோ வீடியோ ஒன்றினை வெளியிட்டு டிரெண்டிங்கில் டாப் ஆர்டரை பிடிக்க வைத்துள்ளது. அதில் அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்வின் போது வெண்பா கலந்து கொண்டு சடங்கினை செய்ய வர உடனே திருமணமாகாதவர்கள் இதை செய்யகூடாது தானே என்று அஞ்சலி அம்மாவிடம் கேட்க. அப்போ திருமணமாகாத வெண்பா எப்படி இதை செய்யமுடியும் என்று உண்மையை நாசுக்காக கண்ணம்மாவிற்கு தெரியும்படி கூறியுள்ளார்.

இதன்மூலம் பாரதி வெண்பாவை திருமணம் செய்யவில்லை என்று தெரியவந்தால் அடுத்தடுத்து வரும் எபிசோட்டில் என்ன நடக்கும் என்பதை அடுத்த வார பிரமோ வீடியோவில் தான் தெரியும்.