ரஜினி கொஞ்சம் கூட மாறவில்லை! அந்த விஷயத்தில் இப்படிதான் என உண்மையை உடைத்த நடிகை..

siva meena kushboo rajinikanth annathe
By Edward Aug 23, 2021 02:59 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உலக தமிழ் நெஞ்சங்களை விட பல வெளிநாட்டு ரசிகர்களையும் ஈர்த்தவர் நடிகர் ரஜினிகாந்த். தன் ஸ்டைலிஷான நடிப்பால் தற்போது வரை சூப்பர் ஹிட் வசூலை பெற்று வருகிறார். சென்டிமெண்டாக குடும்பக்கதையை படமாக்குவதில் வல்லவரான, இயக்குனர் சிவா, விஸ்வாசம் படத்தையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியைவைத்து ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின்மூலம் முதன்முறையாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இமான்.

நடிகை மீனா குஷ்பு இருவரும் சுமார் 7 படங்களில் ரஜினியுடன் நடித்திருக்கிறார்கள் அந்தவகையில், நடிகை குஷ்பூ அண்ணாத்த ஷூட்டிங்கில் நடந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ‘இத்தனை வருடங்களில் அவர் மாறி இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் அப்படியே இருக்கிறார். ஷாட் இடைவேளையின் போது, ​​மீனாவும் நானும் எப்போதும் பேசிக்கொண்டிருப்போம்.

ரஜினி சார் அவரின் படப்பிடிப்பு முடிந்ததும் தனது கேரவனுக்குச் செல்லாமல், நேராக வந்து எங்களுடன் அரட்டையில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார் இப்படத்தில் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் என ஒரு பெரிய பட்டாளமே இணைந்துள்ளது. இதில் நயன்தாரா, குஷ்பூ, மீனா மூவரும் கடைசியாக ரஜினியுடன் இணைந்து ‘குசேலன்’ படத்தில் நடித்திருந்தனர்.

13 ஆண்டுகளுக்குப்பின் இவர்கள் ரஜினியுடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.