ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாகாமல் இருக்க இதுதான் காரணம்! இத்தனை கோடி நஷ்டமா?

pongal annaatthe rajinikanth maanaadu siruthaisiva
By Edward Sep 28, 2021 04:16 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார ரஜினிகாந்த தற்போது அண்ணாத்த படத்தின் இறுதி பணிகளில் இருந்து வருகிறார். அடுத்தடுத்த படங்கள் வரவால் எப்போது படம் ரிலீஸ் என்ற செய்து நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. வலிமை, அண்ணாத்த தீபாவளிக்கு சந்திக்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், அஜித்தின் வலிமை பொங்கள் 2022க்கு மாறியுள்ளது.

அதேபோல் அண்ணாத்த படமும் தீபாவளியில் வெளியிட படக்குழு யோசித்தும் ஆலோசித்தும் வருவதாக செய்திகள் பரவின. இதற்கு காரணம் தியேட்டர்கள் தானாம். ரஜினி சுமார் 600 தியேட்டர்களுக்கு மேல் இந்தியளவில் வெளியிடும் திறன் படைத்தவர். தற்போது கொரோனா லாக்டவுன் பல மாநிலங்களில் இருப்பதால் தியேட்டர்கள் திறக்க நாட்கள் தள்ளி போகுமாம். தமிழ் நாட்டை மையமாக வைத்து படத்தினை வெளியிடாமல் இருக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

கேரளா, கர்நாடக உள்ளிட தென்னிந்திய மாநிலங்களில் தியேட்டர் திறக்காத நிலையில் பொங்களுக்கு வெளியிடலாம் எனவும் சொல்லப்படுகிறது. அப்படி படம் திபாவளிக்கு வெளியாகினால், சுமார் 40 கோடி அளவில் படக்குழுவிற்கு நஷ்டம் ஏற்பட்டு தயாரிப்பாளர் துண்டை போடும் நிலை வரும் என்கிறார்கள் சினிமாத்துறை விமர்சகர்கள். எப்படியிருந்தாலும் நடிகர் சிம்புவின் மாநாடு இப்படத்தில் ஏற்பட்ட பிரச்சனை குறைந்துள்ளது என்று மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.