ஸ்ரீகாந்த் மாமா நானா.. அவர் வாழ்க்கை நாசமாக நான் காரணமில்லை!! பிரபலம் கொடுத்த அதிர்ச்சி..
நடிகர் ஸ்ரீகாந்த்
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனது மாமவும் தனது மேனேஹரும் என் வாழ்க்கையில் விளையாடிவிட்டனர். அவர்களால் தான் சினிமா வாழ்க்கை நாசமானது என்று வருத்தப்பட்டு பேசியிருந்தார்.
இதுகுறித்து இணையத்தில் பத்திரிக்கையாளர் அந்தணன் தான் ஸ்ரீகாந்தின் மாமா என்றும் ஸ்ரீகாந்தின் சினிமா வாழ்க்கையை காலி செய்துவிட்டர் என்றும் புது புரளி கிளம்ப ஆரம்பித்துவிட்டது. இதையறிந்த பத்திரிக்கையாளர் அந்தணன், உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க யூடியூப் சேனலில் பேட்டியளித்து பேசியிருக்கிறார்.
அந்தணன்
நான் எப்படி ஸ்ரீகாந்துக்கு மாமாவாக இருக்க முடியும், ஸ்ரீகாந்த் பிராமணர் நான் பிராமணர் இல்லை. சுந்தர் என்பவர் தான் ஸ்ரீகாந்தின் மாமா, அந்த பெயரை அவர் பேட்டியிலேயே சொல்லியிருந்தால் இப்படியொரு சர்ச்சை கிளம்பி இருக்காது. ஸ்ரீகாந்துக்கு சினிமா ஆலோசகாராக மட்டுமே நான் இருந்தேன்.
கிழக்கு கடற்கரை சாலை படத்தில் நடித்தது தான் அவர் செய்த மிகப்பெரிய தவறு. படத்தின் இயக்குநர் சரி கிடையாது என்று சொன்னேன். ஆனால் அவர் கேட்காமல் உப்புமா கம்பெனிகளிடம் இருந்தும் அனுபவம் இல்லாத இயக்குநர்களிடம் இருந்து அவரை பலமுறை காப்பாற்றியதே நான் தான்.
மாமாதான்
அவரது மாமாதான் அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு வந்தார். அவருடைய மாமாவால் தான் தன்னுடைய சினிமா வாழ்க்கை அழிந்து போனது என்று அவர் ரொம்பவே உறுதியாக நினைக்கிறர என்றுன் அந்தண பேசியிருக்கிறார். மேலும் ரோஜாக்கூட்டம் படத்தில் அறிமுகமாகியப்போது என் வீட்டு பக்கத்தில் தான் ஸ்ரீகாந்த் இருந்தார்.
அதன்பின் நானே என்னை அறிமுகம் செய்து கொண்டு இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காரணமாக அவரது படங்கள் குறித்து விவாதிப்பார். கதைகளை கேட்கச்சொல்வார். இப்படித்தான் ஸ்ரீகாந்துக்கு எனக்குமான நட்பு உருவானது, நான் அவரின் மாமா கிடையாது என்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அந்தணன்.