சாப்பாடுக்கு என்ன பண்ணுவார்னு சொன்னாங்க!!விமர்சித்தவருக்கு DC வசூல் மூலம் லோகேஷ் பதிலடி..
DC
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றிப்படங்களை இயக்கி டாப் இயக்குநராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் DC படத்தில் நடித்திருந்தார்.

படம் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் ரிலீஸான 4 நாட்களிலேயே உலகளவில் சுமார் ரூ. 50 கோடி வசூல் சாதனையை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாராப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
கூலி விமர்சனங்கள்
கூலி படத்தின் மோசமான விமர்சனங்கள் மற்றும் லோகேஷின் இந்த மாஸ் கம்பேக் குறித்து பத்திரிக்கையாளர் அந்தணன் சில கருத்துக்களை கூறியுள்ளார். அதில், கூலி படம் தோல்வி அடைந்ததற்கு லோகேஷ் கூட அவ்வலவு வருத்தப்பட்டு இருக்க மாட்டார், ஆனால், சிலர் அவர் ஒண்ணுமே இல்லாமல் போய்விடுவார், சாப்பாட்டுக்கு என்ன செய்வார், என்றெல்லாம் பேசினார்கள்.

ரஜினி போன்ற பெரிய நடிகர், சன் பிக்சர்ஸ் போன்ற பிரமாண்ட நிறுவனம் இருந்தும் கூலி ஏன் சரியான கதையை கொடுக்க முடியவில்லை என்று கேள்விகள் அவர் மீது வைக்கப்பட்டது. தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு எல்லாம் உடனே பதில் சொல்லி நேரத்தை செலவிடுவதைவிட, செயலில் காட்ட வேண்டும் என்பதை லோகேஷ் கனகராஜ் புரிந்து கொண்டார். அதனால்தான் DC கதையை கேட்டதும் இது சரியான படம் என்று முடிவு செய்து ஹீரோவாக நடித்தார் லோகேஷ்.

தேவையில்லாத பேச்சுகளுக்கு பதில் சொல்லாமல், ரூ. 50 கோடி வசூல் சாதனை மூலம் தன்னுடைய விமரகர்கள் அனைவருக்கும் கம்பீரமான பதிலடியை கொடுத்துள்ளார். இயக்குநராக ஒரு படத்தில் விமர்சனத்தை சந்தித்தாலும், நடிகராக முதல் படத்தில் லோகேஷ் கெத்து காட்டிவிட்டார் என்று பெருமையுடன் பேசியுள்ளார்.