அம்பானியின் 15 ஆயிரம் கோடி அண்டிலியா அரண்மனை!! யாருக்கும் தெரியாத 5 விஷயம்..
Mukesh Dhirubhai Ambani
Businessman
Anant Ambani
Nita Ambani
Isha Ambani
By Edward
பிரம்மாண்டத்திற்கு பேர் போன கோடிஸ்வரர்களிலேயே உலகம் வியந்து பார்க்க கூடியவர் தான் முகேஷ் அம்பானி. ரூ. 9280 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அம்பானி, தன்னுடைய பிள்ளைகளின் திருமணத்தை உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு நடத்தி முடிப்பார்.
அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா திருமணத்திற்கு பின், அவர்கள் பற்றிய சிறு செய்திகள் கூட வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து முகேஷ் அம்பானியின் 27 மாடிகள் கொண்ட அண்டிலியா வீட்டின் மாத கரண்ட் பில் 70 லட்சம் ரூபாய் என்ற தகவலும் பரவியது.
- உலகத்தரம் வாய்ந்த பல வசதிகள் கொண்ட இந்த மாளிகையில் தனி உலகம் என்று சொல்லலாம். அங்கு ஒரு பிரம்மாண்ட கோயில் ஒன்றுள்ளது. முகேஷ் அம்பானியின் குடும்பம் ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்கள் என்பதால் அழகான கோயில் அண்டிலியாவில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தெய்வசிலைகள், அழகான சிற்பங்கள் காணக்கிடைக்கினறன.
- அங்கு மற்றொரு முக்கிய அம்சமாக இருப்பது தனியார் திரையரங்கம் தான். இதில் 50 பேர் அமரும் வசதியுடன் மிக உயர்ந்த தரத்தில் சினிமா அனுபவம் தரும் வசதிகள் உள்ளன. பிரம்மாண்டமான விருந்துகளுக்காக ஒரு பெரிய பால்ரூம் அமைக்கப்பட்டுள்ளதாம். சிறப்பு நிகழ்ச்சி மற்றும் தனியார் கூட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
- உடல்நலன் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறைக்காக அம்பானி வீட்டில் ஸ்பா, யோகா மையம், அழகு நிலையம் அனைந்துள்ளது. மக்கள் நெரிசலும் பெரும் மாசுவும் அதிகமாக கொண்ட மும்பை நகரில் இருக்கும் அண்டிலியா வீட்டில் அழகாக தொங்கும் தோட்டம் அமைத்துள்ளனர்.
- வெப்பநிலை அதிகமான காலநிலை நிலவும் என்பதால் அண்டிலியா வில் ஒரு சிறபு அறை உள்ளது. அந்த அறையில் ஒரு பொத்தானை அழுத்தினால் பனி விழும். அம்பானி குடும்பத்தினருக்காக தனியார் ஐஸ்கிரீம் பார்லர் உள்ளது.
- அண்டிலியா என்பது வெறும் விடு அல்லாமலொரு வாழ்க்கைமுறை. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்காக, உச்சமான ஆடம்பரத்துடன் இருக்கும் இந்த வீடு உலகின் மிகபெரிய ஆடம்பர வீடுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.