சிவகார்த்திகேயன் பட நடிகை அட்ஜஸ்ட்மெண்ட் டார்ச்சர்.. பரபரப்பு தகவல்!!

Sivakarthikeyan Anu Emmanuel Actors Tamil Actors Actress
By Dhiviyarajan Aug 05, 2024 11:05 AM GMT
Report

மலையலா படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை அனு இமானுவேல், கடந்த 2017-ம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின் தமிழ் படங்களில் நடிக்கவில்லை பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் பட நடிகை அட்ஜஸ்ட்மெண்ட் டார்ச்சர்.. பரபரப்பு தகவல்!! | Anu Emmanuel Speak About Adjustment

இந்நிலையில் நடிகை அனு இமானுவேல், சினிமாவில் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை பற்றி பேசு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதில் அவர், நான் சினிமாவிற்கு வந்த ஆர்மபத்தில் பல பேர் என்னிடம் தவறாக அணுகினார்கள். சிலர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தனர். ஆனால் நான் இதை கண்டு அஞ்சாமல் குடும்பத்தினரின் துணையுடன் சமாளித்தேன். இந்த மாதிரியான பிரச்சனைகளை நாம் தனியாக சமாளிப்பதை விட குடும்பத்தின் துணையுடன் சமாளிப்பது நல்லது என்று அனு இமானுவேல் தெரிவித்துள்ளார்.