பிரிவும் அழகானதுதான்.. நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..

Anupama Parameswaran Relationship Tamil Actress Actress
By Jai Oct 13, 2026 04:15 PM GMT
Report

அனுபமா பரமேஸ்வரன்

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், நடிகர் துருவ் விக்ரமும் காதலில் இருப்பதாக பேசப்பட்டு வந்தநிலையில், பேட்டியொன்றில் நார்ஸிஸ்ட் காதல் வன்முறை குறித்து யாரும் பெரிதாக அறிவதில்லை என்று கூறியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

பிரிவும் அழகானதுதான்.. நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்.. | Anupama Parameswaran Has Spoken About A Breakup

இது உளவியல் ரீதியாக நம்ம துன்புறுத்துவது, என் முன்னாள் காதலில் நடந்தது இதுதான், கடந்த 2 ஆண்டுகளாக நான் இதை அனுபவித்து வந்தேன், ஆனால் இது வன்முறைதான் என்பதை அறியவே நீண்ட காலமாகிவிட்டது.

அந்த காலக்கட்டத்தில்தான் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு, என் உடல் எடையை குறைத்தேன், என்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவுக்குப்பின்னால் இரண்டு ஆண்டுகால வலியும் போராட்டமும் இருந்தது என்று கூறியிருந்தார்.

பிரிவும் அழகானதுதான்.. நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்.. | Anupama Parameswaran Has Spoken About A Breakup

இந்நிலையில், கிரேஸி கல்யாணம் படத்தில் நடித்துள்ள அனுபமா, அக்டோபர் 16 ஆம் தேதி அப்படம் ரிலீஸாகவுள்ளதால் பட பிரமோஷன்களில் கலந்து கொண்டு வருகிறார்.

பேட்டியொன்றில் காதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அனுபமா, காதலும் அழகுதான், அதேபோல், பிரிவும் அழகானதுதான், நீங்கள் அதிலிருந்து எதை உணர்ந்தீர்கள் என்பதைப் பொறுத்துதான் என்று கூறியிருக்கிறார்.