கணவருக்கு இந்த விஷயத்தில் டஃப் கொடுக்கும் நடிகை! மிரண்டு போன விராட்

cricket viratkohli anushkasharma indianactress chakdaxpress
By Edward Mar 07, 2022 07:30 PM GMT
Report

இந்திய சினிமாவின் டாப் 10 நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை அனுஷ்கா சர்மா. கடந்த 2017ல் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கடந்த ஆண்டு அவர்களுக்கு மகள் பிறந்துள்ளார்.

நடிப்பில் இருந்து விலகி இருந்தாலும் தயாரிப்பில் கவனம் செலுத்தியும் கணவர் விராட்டிற்கு கிரிக்கெட்டில் பக்க பலமாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் குழந்தை பிறந்த பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் அனுஷ்கா சர்மா.

ரீஎண்ட்ரி கொடுக்க முதல் படமே பெண் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பவுளிங் வீராங்கனை ஜுலன் கோசுவாமியின் வாழ்க்கை வரலாறு படமான Chakda Xpress நடித்துள்ளார். விரைவில் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அப்படத்தின் முக்கிய புகைப்படங்களை அனுஷ்கா வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.