ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை அனுஷ்கா செட்டி!! இஞ்சி இடுப்பழகியால் ஏற்பட்ட பரிதாபம்

Anushka Shetty
By Edward Feb 23, 2023 09:46 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் சூப்பர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகையானவர் நடிகை அனுஷ்கா செட்டி.

தமிழில் ரெண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி விஜய், அஜித், சூர்யா, ஆர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தார்.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை அனுஷ்கா செட்டி!! இஞ்சி இடுப்பழகியால் ஏற்பட்ட பரிதாபம் | Anushka Shetty Latest Photo Video Viral Shoking

இடையில் இஞ்சி இடுப்பழகி படத்திற்கான உடல் எடையை ஏற்றி குண்டாகி இதுவரையில் எடையை குறைக்கமுடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு உடல் எடையை சற்று குறைத்து வந்திருந்த அனுஷ்கா செட்டி சில நாட்களுக்கு முன் தன் அம்மாவுடன் சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.

பெங்களூரில் இருக்கும் பிரபல கோவிலுக்கு சென்று வழிப்பட்ட அனுஷ்கா செட்டியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.

அனுஷ்கா செட்டியை பார்த்த ரசிகர்கள் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியதால் ஷாக்காகி கருத்துக்களை கொடுத்து வருகிறார்கள்.

Gallery