ரூ. 12 கோடி ஹைதராபாத் வீட்டை விற்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி!! சினிமாவுக்கு குட் பை-ஆ..

Anushka Shetty Hyderabad Tamil Actress Cinema News
By Jai Nov 28, 2026 06:51 AM GMT
Report

அனுஷ்கா ஷெட்டி

தமிழ், தெலுங்கு சினிமாத்துறையில் தன்னுடைய மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தையே வைத்து ஆண்டவர் தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி. முதல் படத்திலேயே நடிகர் நாகர்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்து டாப் நடிகையாக உச்சத்தை அடைந்தார்.

ரூ. 12 கோடி ஹைதராபாத் வீட்டை விற்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி!! சினிமாவுக்கு குட் பை-ஆ.. | Anushka Shetty Plans To Sell Her Hyderabad Home

கிளாமர், ஹோம்லி லுக் என்று அசால்ட்டாக ஸ்கோர் செய்த அனுஷ்காவிற்கு பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோயினாக ஜொலித்தார். இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் உடல் எடையை ஏற்றியப்பின் குறைக்க முடியாமல் தவித்தார். இதனால் தன்னுடைய மார்க்கெட்டையே இழந்து படவாய்ப்பில்லாமல் ஒதுங்கினார்.

அதன்பின் மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்து 2வது இன்னிங்ஸை தொடங்கினார். ஆனால் அப்படம் ஃபீல் குட் படமாக மாறியதோடு ஓரளவுக்கு தான் வெற்றியை அவருக்கு கொடுத்தது.

ரூ. 12 கோடி ஹைதராபாத் வீட்டை விற்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி!! சினிமாவுக்கு குட் பை-ஆ.. | Anushka Shetty Plans To Sell Her Hyderabad Home

12 கோடி ஹைதராபாத் வீடு

40 வயதை எட்டியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் அனுஷ்கா, ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் அவருடைய 12 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை விற்கும் அளவிற்கு வந்துள்ளாராம். அந்த வீட்டை விற்றுவிட்டு வேறு பகுதியில் வீடு வாங்குவதற்காக அவர் அதை விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் இதை விற்றுவிட்டு சினிமாவில் இருந்து விலகிவிட்டு மொத்தமாக கணவருடன் வெளிநாட்டில் செட்டிலாகவுள்ளதாகவும் பிளான் செய்திருக்கிறாராம் அனுஷ்கா.

ரூ. 12 கோடி ஹைதராபாத் வீட்டை விற்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி!! சினிமாவுக்கு குட் பை-ஆ.. | Anushka Shetty Plans To Sell Her Hyderabad Home

அதேசமயம் இன்னும் சிலர், இதெல்லாம் இல்லை, அனுஷ்காவுக்கு சமீபத்தில் வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் பணக் கஷ்டம் வந்துவிட்டதால் அந்த வீட்டை விற்றுவிட்டார் என்றும் கூறுகிறார்கள்.